search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம ஆசாமிகள்"

    • வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.
    • காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதியில் ஒரு மாதமாக அதிகாலையில் பனி பெய்து வருகிறது. இதற்கு நேர்மாறாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிக அளவில் வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.

    சுண்டகிரி, மேலுமலை, குருபராத்தப் பள்ளி, கோப சந்திரம் மற்றும் பல பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரமாக பல பகுதியில் சிலர் நெருப்பு வைத்து வருவதால் காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.

    தற்போது சூளகிரி பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அரசுக்கு சொந்தமான குட்டை நில பகுதியில் உள்ள முட்புதர்களுக்கு யாரோ நேற்று மாலை நெருப்பு வைத்ததால் நெருப்பு பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

    இங்கு அதிக குடியிருப்புகள் இருப்பதாலும், சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் பொது மக்கள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகினர்.

    இதனையடுத்து சூளகிரியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் மற்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • காரில் வந்து மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் டிவி துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் இவரது மகன் மோகன் (வயது 50) இவர் விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று காலை தனது விவசாயத்தில் விளைந்த மிளகாய் பறித்து அருகில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே விற்பதற்காக தனது வீட்டின் கதவை பூட்டி கொண்டு சென்று வியாபாரம் செய்து வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்தனர்.

    அறையில் உள்ள 2 பீரோவை உடைத்து அதில் இருந்த 4 ½ சவரன் தங்க நெக்லஸ் மற்றும் ½ சவரன் தங்க கம்மல் திருடு போனது தெரியவந்தது.

    இதனையெடுத்து மோகன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் மர்ம ஆசாமிகள் யாரோ காரில் வந்தவர்கள் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அருகில் இருந்த வீட்டின் கதவை பூட்டை உடைத்து நகை திருடி சென்றுயுள்ளது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ×